நான் ரசித்த நீயா நானா ஜோடி !


 நான் ரசித்த  நீயா நானா ஜோடி !





ஏ...GOOGLE ஏன் சுந்தர் பிச்சை பெயர் இல்லை?



அமெரிக்க வாழ் இந்தியாரன சுந்தர் பிச்சை 2004 ல் கூகிள் Vice President of  Product  Manager ஆக பணியில் சேர்ந்தார்.2011-ல்  Google Chrome- ன் senior vice president ஆக பதவி உயர்வு பெற்றார்.

       
இவர் கரக்பூர் I.I.T ல் (B.E) வெள்ளிப்பதக்கம் பெற்றவர். University of Pennsylvania - The Wharton School ல் MBA வும் Stanford University ல் M.S ம் படித்தவர். 









கூகிள் நிறுவனர்களும் Stanford University ல் படித்தவர்கள்தான் என்பது குறிப்பிடதக்கது.


விஷயத்திற்க்கு வருவோம், கூகுளின் அதிகாரப்பூர்வமான தளமான



இந்த தளத்தில் அவர் பெயர் ஏன் இடம் பெறவில்லை? என்பதுதான் நம்  கேள்வி
அட இந்தியனாக இருந்துகொண்டு இதைக்கூட கேட்க்காவிட்டால் எப்படி?

நேர்மையைத் தவிர வேறு சொத்து இல்லை




இந்தியாவில் நீதிக்கு மறுபடியும்   புத்துயிர் வந்துள்ளது போல் உள்ளது.    அதற்க்கு, முக்கிய காரணம் நமது மதிப்புக்குரிய தலமை நீதிபதி சுரேஷ் ஹோமி கபாடியா அவர்கள்தான்.
          
 இவர் உச்ச நீதி மன்றத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றிய பின் கடந்த ஆண்டு இந்தியாவின் 38வது தலமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சாதரணக் குடும்பத்தில் பிறந்தவர். நேர்மையைத் தவிர என்னிடம் வேறு எதுவும்  சொத்து கிடையாது என்கிறார் இவர்.
           

           இந்தவருடம் மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்றம்  என்ன நடக்கிறது இந்த தேசத்தில்?  what the hell is going on in this Country ? என்று ஆரம்பித்து இன்று வரை தனது முழு (நீதி) அதிகாரத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறது.
  
    ஹசன் அலி,
    பி.ஜே.தாமஸ் ,
    2 ஜி,
    ராசா,
    கனிமொழி,
    கறுப்புப்பணம்,
    தாயநிதி மாறன்

என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

       சாமி! நீங்க நல்லாருக்கணும் நீதிமன்றமுன்ன என்னான்னு இப்பதாங்க தெரியுது சாமி! 









* பிளாஸ்டிக் தார் ரோடு










திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும், இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசுதேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கவும் முடிவு செய்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல், இவற்றை ஜல்லிகளில் கலந்து "பிளாஸ்டிக் கோட்டிங்' கொடுத்து அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்கவும் ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் தார்ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் தார் ரோடு, கோவில்பட்டியில் 2002ல் போடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடால் ஏற்படும் பயன்கள், தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2002-03ல் தமிழக அரசு புத்தகமாக வெளியிட்டது. மத்திய அரசு 2002ல் பிளாஸ்டிக் ரோட்டிற்கு காப்புரிமை வழங்கியது. கிராம வளர்ச்சி துறைமூலம் தமிழகத்தில் 2000 கி.மீ., அதிகமான பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை, கேரளா, சிம்லாவிலும் வாசுதேவன் மேற்பார்வையில் பிளாஸ்டிக் ரோடுகள் அமைக்கப்பட்டன.
காப்புரிமை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கேட்டது. ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது 2006ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு மத்திய அரசு 2006ல் காப்புரிமை வழங்கியது. 2002 முதல் 2008வரை இந்தியாவில் போடப்பட்ட பிளாஸ்டிக் ரோடுகளின் தன்மை, பயன்கள், தரம், உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுக்கு இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கியதுடன், இவரது அறிக்கையை ஆய்வு செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் ரோடு அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும் பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள், உழைப்புகள் குறித்து (கைடு லைன்) மற்றொரு புத்தகம் வெளியிட்டது. இந்த புத்தகத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்பு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு, அந்த புத்தகத்தில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் தரமானது, நீடித்து உழைக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளது.
அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமங்களில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்து கொடுத்து, அதற்கான கைடு லைன் வெளியிட்டது. அதில், பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்க விரும்பும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள், தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பினால், செலவில் பாதியை மானியமாக வழங்க இருப்பதாகவும், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பேராசிரியர் வாசுதேவனை அணுகலாம் என கைடு குறிப்பிடப்பட்டிருந்து. சிம்லாவில் பிளாஸ்டிக் ரோடு: அதன்பின் சிம்லாவில் வாசுதேவன் மேற்பார்வையில் 150 கீ.மீ,. ரோடு அமைக்கப்பட்டது. "பிளாஸ்டிக் மறு சுழற்சி கமிட்டியில் டேட்டா புத்தகம் தயாரிக்கும் உறுப்பினராக வாசுதேவனை, கேரள அரசு சேர்த்தது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பிப்.,4ல் வெளியிட்டுள்ள அரசு கெஜட்டில், பிளாஸ்டிக் ரோடு போட தடை இல்லை என்றும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலைகள் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது: இது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண ரோட்டை காட்டிலும், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பாதிப்படைவதில்லை. தேய்மானம் மிக குறைவு. பராமரிப்பு செலவுகள் கிடையாது. தார் பயன்பாடு 10 சதவீதம் குறைவு. ஒரு கி.மீ.,க்கு 50 ஆயிரம்வரை செலவு மிச்சம். கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் மாசு தவிர்க்கப்படும். தட்பவெட்ப நிலை சீராகும். பிளாஸ்டிக்கை பிரித்துவிடுவதால், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது எளிது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரோடு அமைத்தால், பிளாஸ்டிக்கால் இவ்வுலகிற்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை நீக்கலாம்.பிளாஸ்டிக் ரோடு அமைக்க விரும்புவோர் 0452 248 2240 அல்லது 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்.



* பேராசிரியர் வாசுதேவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! பாராட்டுகள் !


இதை விட பெரிய ஊழலகள் உள்ளன இந்தியாவில் ...



இதை விட பெரிய ஊழலகள் உள்ளன இந்தியாவில் ... சுரங்கம் எனும் அற்புத பணம் காய்ச்சி மரம் இருப்பது தெரியாதா ?









நன்றி : தினமணி !


1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் . ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே.