வளர தேவை 10
கோவையில் இந்திய தொழில் வர்தக சபை - VISION KOVAI என்ற பெயரில் வெளிட்ட கோரிக்கைகள். வேட்பாளரைப் பார்த்து இவற்றையெல்லாம் கேட்க சொல்கிறார்கள்
சாலைகள் ROADS
15 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட RING ரோடுகளும், 100க்கும் மேற்ப்பட்ட திட்ட சாலைகளும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கோவை வழியாக செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் அடுத்த நகரம் வரை 6 வழிப்பாதைகளாக்க வேண்டும்.
பெருநகர வளர்ச்சிக்குழுமம்,மாஸ்டர் பிளான்
COIMBATORE URBAN DEVELOPMENT AUTHORITY & MASTER PLAN
சென்னையைப் போன்று கோவையிலும் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்கப்பட வேண்டும். 1994ல் முதல் திருத்தி அமைக்கப்படாத கோவை நகர மாஸ்டர் பிளான் மற்றும் கட்டிட விதிமுறைகள் தற்கால, எதிர்கால தேவைகளுக்கேற்ப திருத்தி வெளியிட வேண்டும்
எழைகளுக்கு குடியிருப்புகள்,குடிநீர்- JNNURM
HOUSING FOR SLUM DWELLERS & WATER - JUURUM
திட்டத்தின் கீழ் குடிசை வாழ் எழை மக்களுக்கான நிரந்தர குடியிருப்புகள்,பில்லூர் குடிநீர்திட்டம் மற்றும் சாலை வளர்ச்சி ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசின் மானியத்தை மேலும் அதிகரித்து,குறித்த காலத்தில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இரயில்வே RAIWAY
கோவையிலிருந்து திருப்புர்,பொள்ளாச்சி,பாலக்காடு மற்றும் மேட்டுப்பாளையத்திற்க்கு குறுகிய தூர ரயில்கள் இயக்க வேண்டும்.
வடகோவை,போத்தனூர்,இருகூர் ரயில் நிலையங்களை புறநகர்
ரயில் நிலையங்களாக விரிவுபடுத்த வேண்டும். ஈரோடு வரை மூன்றாவதாக புதிய ரயில்வே இரும்பு பாதையும், வடகோவை ரயில் நிலையத்திற்கு மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ஒரு புதிய இணைப்பு சாலையும் அமையவேண்டும்
அரசு தொழிலாளர் மருத்துவமனைகள் மற்றும் உயர்நீதி மன்றக் கிளை
GENERAL HOSPITAL ,ESI HOSPITAL & HIGH COURT BENCH
நூற்றாண்டு காணும் கோவை பொது மருத்துவமனை (G.H.) இ.எஸ்.ஐ. (E.S.I),மருத்துவமனை ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி 3000 உள்நோயளிகளும்,25000 வெளி நோயளிகளும் தரமான மருத்துவ சிகிச்சைகள் பெரும் வகையில் நவீனப்படுத்த வேண்டும். கோவையில் உயர்நீதி மன்றக்கிளையும், மத்திய மாநில வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்வாயமும் அமைக்க வேண்டும்.
மின் திட்டங்கள்
ELECTRICITY
அதிக வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் நகரமான கோவையின் மின் பற்றாக்குறையை போக்க புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் தடையற்ற,தரமான மின்சாரம் வழங்க வேண்டும்.
ஒருங்குனைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் விவசாய ஏற்றுமதி வளாகம்
A LOGISTIC HUB AND AN AGRI EXPORT COMPLEX
கோவையில் ஒருங்குணைந்த பல்வழி போக்குவரத்து வளாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.குளிர்பதன கிடங்கு வசதியுடன் கூடிய நவீன விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி வளாகம் அமைக்கப்பட வேண்டும்.
நீர் நிலைகள் மற்றும் நொய்யல்
WATER BODIES & NOYYAL RIVER
பாண்டி ஆறு, புன்னம்புழா நீர் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். நொய்யல் ஆறு குளங்கள் மற்றும் வாய்கால்களை தூர்வாரி,ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் கலக்காமல் பராமரிக்க வேண்டும்
சுற்றுலா,பொழுதுபோக்கு,விளையாட்டு
SPORTS , TOURISM & HERITAGE
குழந்தைகளுக்காக எந்த ஒரு வசதியில்லாத கோவை பகுதியில் பெரும் நீர் நிலைகளை சுற்றியும் அருகில் உள்ள இயற்கை எழில் வளங்களிலும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழமைவாய்ந்த பேரூர் பகுதியை ‘ பாரம்பரிய நகரமாக ‘ அறிவித்து சுற்றுலா வசதிகளை மேம்படுத்த வோண்டும். அனைத்து நெடுஞ்சாலைகளிலும் விளையாட்டு திடல்களும், பூங்காக்களும் அமைக்க வேண்டும்.
விமான நிலையம்
AIRPORT
கோவை விமான நிலையத்தின் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துற்கான வசதிகளை மூன்று மடங்காக அதிகரித்து,சர்வதேச தரத்திற் இணையாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அணுகுசாலையை ஆறு வழி சாலையாக மாற்ற வேண்டும்
கோவை வளர மட்டு மல்ல எல்லா நகரங்களின் வளர்ச்சிக்கும் இவை யாவும்
தேவை .
இந்த பத்து மட்டுமல்ல , என்னை பொறுத்தவரை முக்கியமான இன்னும் ஓன்று தேவை அது , கோவை நீலகிரிக்கு அடுத்த பகுதியக பூகம்ப அபய பகுதியாக உள்ளது . ஆகவே , பூகம்பத்தை முன்னரே தெரிந்து கொள்ள வசதி யான கருவிகள் நிறுவப்பட வேண்டும் . இது மிக முக்கியமான ஒரு தேவை யாகும் . இதை அலட்சியபடுத்த வேண்டாம் .
பூகம்பம் பற்றி நிபுணர்கள் சொன்வற்றை எடுத்து படித்து பாருங்கள் .