* 1 2 3 … எதுவரை எண்ணத்தெரியும் உங்களுக்கு?






1940 ல் கொலம்பியா பல்கலைக்கலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கணிதமேதை Edward Kasner மிகப் பெரிய எண்களைப் பற்றிய ஆய்வில் இருந்தார். தன் பேரப்பிள்ளைகள் Milton, Edwin ஆகியோர் மூலமாக விளையாட்டாய் 1 அடுத்தாற் போல் 100 பூஐயம் வரும் எண்ணுக்கு google என்ற பெயரைச்சூட்டினார். இதையே Mathematics and the Imagination என்ற தன் கணிதநூலில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.பிறகு, Googolplex
என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.




Google என்றால் 1 இற்கு அடுத்து 100 பூஐயம் வரும்
Googlolplex என்றால் 1 இற்கு அடுத்து Google பூஐயம் வரும்

இப்போதைக்கு உலகிலேயே பெரிய எண் கூகுள்ப்ளெக்ஸ் தான்.



அது சரி,போன இடுக்கையில் சொன்ன சதுரங்கத்தின் 64 கட்டத்திலும் உள்ள அரிசிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று எண்ணிப்பார்த்து விடுங்கள்.
1 -1, 2-4, 3-8, 4-16, 5-32, 6-64, 7-128 ......... 64-? என்று சதுரங்கத்தின் ஓவ்வோரு கட்டத்திலும் அரிசி வைத்தால் 64 வது கட்டத்தில் 20 இலக்க எண் ஒன்று வருகிறதா? அந்த எண்ணை எப்படி அழைப்பது ? பார்த்து விடுவோமா ?






பத்து (TEN) ................................................ 1 இற்கு அடுத்து 1 பூஐயம்

நூறு (Hundred).......................................... 1 இற்கு அடுத்து 2 பூஐயம்

ஆயிரம் (Thousand)...................................1 இற்கு அடுத்து 3 பூஐயம்

பத்தாயிரம்(Ten Thousand) ......................1 இற்கு அடுத்து 4 பூஐயம்

லட்சம் ( Laks, Hundered Thousand)....... 1 இற்கு அடுத்து 5 பூஐயம்
மில்லியன் (Million).................................. 1 இற்கு அடுத்து 6 பூஐயம்
பத்துமில்லியன்( Ten million)..................1 இற்கு அடுத்து 7 பூஐயம்
பில்லியன் (Billion)......................................1 இற்கு அடுத்து 9 பூஐயம்
டிரில்லியன் ( Trillion)................................1 இற்கு அடுத்து 12 பூஐயம்
குவார்டிர்ல்லியன் (Quadrillion)..............1 இற்கு அடுத்து 15 பூஐயம்
குவினடில்லியன் (Quintillion)................. 1 இற்கு அடுத்து 18 பூஐயம்
செக்ஸ்டில்லியன் (Sextillion)...................1 இற்கு அடுத்து 21 பூஐயம்
செப்டில்லியன் (Septillion)........................ 1 இற்கு அடுத்து 24 பூஐயம்
ஒக்டில்லியன் (Octillion)........................... 1 இற்கு அடுத்து 27 பூஐயம்
நோனில்லியன் (Nonillion)........................1 இற்கு அடுத்து 30 பூஐயம்
டெசில்லியன் (Decillion) ............................1 இற்கு அடுத்து 33 பூஐயம்
அன்டெல்லியன் (Undecillion)...................1 இற்கு அடுத்து 36 பூஐயம்
ட்யூடேசில்லியன் (Duodecillion)............1 இற்கு அடுத்து 39 பூஐயம்
ட்ரெடிசில்லியன் (Tredecillion ) ..............1 இற்கு அடுத்து 42 பூஐயம்
க்யுடோர்டெசில்லியன் (Quattuordecillion).1 இற்கு அடுத்து 45 பூஐயம்
க்யூன்டோடெசில்லியன் (Quindecillion)....1 இற்கு அடுத்து 48 பூஐயம்
செக்டீசில்லியன் (Sexdecillion)........1 இற்கு அடுத்து 51 பூஐயம்
செப்டன்டிசில்லியன் (Septendecillion).....1 இற்கு அடுத்து 54 பூஐயம்
ஆக்டோடிசில்லியன் (Octodecillion)............1 இற்கு அடுத்து 57 பூஐயம்
நோவெபம்டிசில்லியன்(Novemdecillion).... 1 இற்கு அடுத்து 60 பூஐயம்
வெஐன்டில்லியன் (Vigintillion).........1 இற்கு அடுத்து 63 பூஐயம்
சென்டில்லியன் (Centillion) ........... 1 இற்கு அடுத்து 303 பூஐயம்






....கூகிள் ரெம்ப ஓவர் இதல்லாம்